சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தில் அக்ஷய்குமாரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அனுராக் காஷ்யப்பும், அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராயும் வில்லனாக நடித்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹீரோ' இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே அர்ஜுன் நடித்து வருவதால் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது
ஆனால் தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல் என்பவர் வில்லனாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அர்ஜுனன் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது