Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ரோகிணியின் மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!

நடிகை ரோகிணியின் மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!
, திங்கள், 7 நவம்பர் 2016 (10:28 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அடுத்து சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஜோடி சேரவுள்ளார்.

 
சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோகிணி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ல் தொடங்கும் என்றும், ரோகிணி 14ம் தேதி படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளது. இப்படத்தை 24AM ஸ்டூடியோ தயாரிக்கும் என கூறப்படுகிறது.
 
இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதனால்தான் திருமணத்தை நிறுத்தினேன் - நடிகை த்ரிஷா ஓபன் டாக்