பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடக்க மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியதாவது:-
மதுரை தமிழ் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தோம்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார். `
இதற்கு முன்னதாக `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் வரும் 25ஆம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.