சிவகார்த்திகேயனின் ரெமோ கோவை ஏரியா சோல்டு அவுட்
சிவகார்த்திகேயனின் ரெமோ கோவை ஏரியா சோல்டு அவுட்
கபாலிக்கு அடுத்து விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகம் எதிர்பார்ப்பது சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தைதான். படம் அக்டோபரில்தான் வெளியாகிறது. ஆனால் ஆகஸ்டிலேயே படத்தின் ஏரியா உரிமைக்கு அடிதடி.
ரெமோவின் கோவை ஏரியா முதலாவதாக விற்பனையாகியிருக்கிறது. வாங்கியிருப்பவர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.
மாஸ் நடிகர்களின் படங்கள் என்றால் கோவை உரிமை திருப்பூர் சுப்பிரமணியனுக்குதான். கோவை இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு ஏரியா உரிமையை கைப்பற்றிவிடுவார். ஆனால் கபாலி படத்தை வாங்க இவர் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் ரெமோவின் கோவை ஏரியாவை முதல் ஆளாக வாங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் படங்களில் ரெமோதான் டாப் சேல்ஸ் என்கிறார்கள்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்