சிவகார்த்திகேயன் முதன்முதலாகத் தயாரித்துவரும் படத்துக்கு ‘கனா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
 
									
										
								
																	
	நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர், பாடகர் என்ற வரிசையில், தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவாவின் கல்லூரித்  தோழரும், பாடலாசிரியர், பாடகர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	கிரிக்கெட்டராக விரும்பும் மகள் – அப்பாவுக்கு இடையேயான பாசப்பிணைப்பு தான் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக், நேற்று வெளியானது. இந்தப் படத்துக்கு ‘கனா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதை டேக்லைனாக வைத்துள்ளனர்.
 
									
										
										
								
																	
	சிவாவின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘மரகத நாணயம்’ படத்துக்கு  இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.