Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்பத்தான் பூஜையே போட்டிருக்கு! அதுக்குள்ள வியாபாரம் முடிஞ்சது: அதுதான் சிவகார்த்திகேயன்

இப்பத்தான் பூஜையே போட்டிருக்கு! அதுக்குள்ள வியாபாரம் முடிஞ்சது: அதுதான் சிவகார்த்திகேயன்
, செவ்வாய், 27 ஜூன் 2017 (22:36 IST)
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் வியாபாரம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது.



 


இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. படத்தின் பூஜை போட்ட சில நாட்களில் வியாபாரம் தொடங்குவது இன்னும் அஜித், விஜய் படங்களுக்கே இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் அதுக்கும் மேல என்று அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு போட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், சமந்தா முதல்முதலில் ஜோடி சேரும் இந்த படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லால் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீராவை தேடிப்பிடிச்சு கூட்டிகிட்டு வாங்க! விஷால் கட்டளை