Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுக்காக கொக்கி போட்ட நெல்சன்… நாசூக்காக மறுத்த ரஜினி?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:33 IST)
ஜெயிலர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது சம்மந்தமாக நெல்சன் ரஜினிகாந்தை அணுகி அது சம்மந்தமாக அனுமதி கேட்டபோது, வேண்டாம் என்று ரஜினிகாந்த் மறுத்துவிட்டாராம். இதனால் இப்போது ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments