ரஜினி படத்தில் மாஸ் பாடல்வரிதான் சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பா?

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (08:01 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜமால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதையடுத்து இப்போது நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘சிங்கநடை’ என்று டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments