Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணியா? இணையத்தில் பரவும் தகவல்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (10:24 IST)
சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் காமெடி மன்னன் கவுண்டமணி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கடந்த பல வருடங்களாக தமிழ் திரையுலகில் ஆக்கிரமித்து வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் இவர் நடிக்காத படமே இல்லை என்று கொள்ளலாம். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காமெடி கிங் கவுண்டமணி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த தகவல் பொய்யாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments