Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபலங்களுக்காக லால் சிங் சட்டா படத்தின் சிறப்புக் காட்சி… வெளியான வைரல் புகைப்படம்!

பிரபலங்களுக்காக லால் சிங் சட்டா படத்தின் சிறப்புக் காட்சி… வெளியான வைரல் புகைப்படம்!
, வெள்ளி, 15 ஜூலை 2022 (17:43 IST)
அமீர்கான் நடிப்பில் பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்காக லால் சிங் சட்டா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது படத்துக்கான பரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் அமீர்கான் தன் வீட்டில் பிரபலங்களுக்காக சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் ராஜமௌலி, சிரஞ்சீவி மற்றும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நாக சைதன்யா ஆகியோர் பங்கேற்றுப் படத்தைப் பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளம் அதிகம்- முன்னணி நடிகர் 'ஓபன் டாக்'