Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்!
, வியாழன், 6 ஜூலை 2023 (15:12 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 146 நிமிடங்கள் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தை தயாரிப்பது எப்போது?… பிரபல தயாரிப்பாளர் பதில்!