Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட உரிமையை கைப்பற்றிய முன்னணி ஓடிடி!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட உரிமையை கைப்பற்றிய முன்னணி ஓடிடி!
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:10 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தை மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விருமன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதி 2 அப்டேட்… இரண்டு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்த கார்த்தி!