சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் சென்சார் தகவல்!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (12:35 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் ரன்னிங் டைம் 146 நிமிடங்கள் என தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டைட்டில் அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?... ஆச்சர்யப்படுத்தும் ‘வாரனாசி’ படக்குழு!

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… பிரபல நடிகை துளசி அறிவிப்பு!

முதல் படத்திலேயே டப்பிங் பேசும் ஸ்ரீலீலா… த்ரிஷா & நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments