Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ் படத்துக்காக நடிப்புக்கு தனி டிரைனர் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (07:55 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது வி ஐ டி கல்லூரியில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிப்புக்காக தனிப் பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளாராம் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு அவரிடம் ஆலோசனை பெற்று நடித்து வருகிறாராம். முன்னதாக விஜய் சேதுபதியும் தன்னுடைய படங்களில் நடிப்புப் பயிற்சியாளராக பூஜா தேவாரியா என்பவரை நியமித்து இருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments