Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டையன் படத்தில் முதல் நாள் ஷூட்டிங்… எனர்ஜியை வெளிப்படுத்திய நடிகர்!

வேட்டையன் படத்தில் முதல் நாள் ஷூட்டிங்… எனர்ஜியை வெளிப்படுத்திய நடிகர்!
, புதன், 6 மார்ச் 2024 (07:06 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் ராணா தற்போது இந்த படத்துக்காக முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலு இயக்குனர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் கார்டியன்… திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!