மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

vinoth
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (11:23 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதவாக்கில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் அல்லது பிரேம்ஜி ஆகிய இருவரில் ஒருவர்தான் இசையமைப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மேலும் ஒரு மாதம் தாமதம் ஆகி ஜனவரி மாதத்தில்தான் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆபாச தளங்களில் நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ.. சைபர் க்ரைம் போலீசில் புகார்..!

இது கோவில் இப்படியெல்லாம் செய்ய கூடாது.. திருப்பதியில் ரசிகர்களை கண்டித்த அஜித்..!

‘சூர்யா 46’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

50 கோடி ரூபாய் மைல்கல்லைத் தொட்ட மாரி செல்வராஜ் &துருவ் விக்ரம்மின் ‘பைசன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments