சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதன், 9 மே 2018 (16:08 IST)
சிவகார்த்திகேயன் ஜோடியாக மறுபடியும் நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
 
எம்.ராஜேஷ் இயக்கத்தில், பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விவேக் – மெர்வின் இசையமைக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
தற்போது அஜித் ஜோடியாக ‘விசுவாசம்’ படத்தில் நடித்துவரும் நயன்தாரா, அதன்பிறகு இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுதவிர, ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம் 2’, கே.எம்.சர்ஜுன் இயக்கும் படம், ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களும் நயன்தாரா கைவசம் இருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ரிலீஸான கீர்த்தி சுரேஷ் படம்