நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அஜீத்துக்கு சிலை வைப்பது குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் அதித்திற்கு சிலை வைப்பது குறித்து இயக்குனர் சிவா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மனிதர்களுக்கு சிலை வைப்பதெல்லாம் அஜித்துக்கு சுத்தமாகப் பிடிக்காது. ரசிகர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்கள் யாராக இருந்தாலும் சரி, படத்தை பார்த்து அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைவிட்டு அவருக்கு சிலை வைப்பதை அவர் கண்டிப்பாக விரும்ப மாட்டார் என்று கூறியுள்ளார்.