Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்

சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (17:05 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ரெமொ. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார்.


 

 
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற ஜுலை 1-ந் தேதி இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
விக்னேஷ் சிவன் எழுதியுள்ள 'செஞ்சிட்டாளே' என்ற பாடலைத்தான் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
 
ஜுலை 1-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சிம்மா விருது வழங்கும் விழாவில் இதை வெளியிடவுள்ளார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவின் பாலியின் தமிழ் படம் - ஸ்ரத்தா ஸ்ரீனி நடிக்கிறார்