Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவின் பாலியின் தமிழ் படம் - ஸ்ரத்தா ஸ்ரீனி நடிக்கிறார்

நிவின் பாலியின் தமிழ் படம் - ஸ்ரத்தா ஸ்ரீனி நடிக்கிறார்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (16:57 IST)
நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி அங்கு முக்கிய இடம் பிடித்தார். தற்போது தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.


 
 
கன்னடத்தில் வெளியான ’உலிதவரு கண்டன்தே’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை மிஷிகினின் உதவி இயக்குனர் கௌதம் இயக்க கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீனி உடன் நடிக்கிறார். 
 
இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடி கிடையாது. ஸ்ரத்தா ரிப்போர்டராக வருகிறார். தூத்துக்குடியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட்பிரபு படத்தில் மீண்டும் சூர்யா