Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 கோடி வசூலைத் தாண்டிய சீதாராமம்… அனைத்து மொழிகளிலும் ஹிட்

50 கோடி வசூலைத் தாண்டிய சீதாராமம்… அனைத்து மொழிகளிலும் ஹிட்
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆன சீதா ராமம் திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதை அடுத்து நல்ல வசூலை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது இந்த படத்துக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளதாம். சீதாராமம் படத்தோடு வெளியான மற்ற படங்கள் எதுவும் சோபிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 10 நாட்களில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சீதாராமம் திரைப்படம் பிளாக்பஸ்டர் லிஸ்ட்டில் இணைந்துள்ளது சீதாராமம்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா விமர்சகர் மறைவு- நடிகர் தனுஷ் இரங்கல்!