மீண்டும் இணைகிறதா சிறுத்தை சிவா & கார்த்தி கூட்டணி?

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2024 (13:38 IST)
ஒளிப்பதிவாளரான சிவா தமிழில் சிறுத்தை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதன் பின்னர் அஜித்தோடு இணைந்து நான்கு படங்கள் பணியாற்றி தமிழின் முன்னணி இயக்குனர் ஆனார். அதன் பின்னர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்க, அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸாகும் நிலையில் சிவாவின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. கங்குவா படத்திலும் கார்த்தி ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments