Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி…எந்த படத்தில் தெரியுமா?

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:55 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவிலலை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இட்லி கடை படத்தைத் தயாரித்து வரும் Dawn pictures நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments