Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உறுதியானது ரஜினி-சிறுத்தை சிவா படம் – இந்தாண்டு இறுதியில் ஷூட்டிங் !

உறுதியானது ரஜினி-சிறுத்தை சிவா படம் – இந்தாண்டு இறுதியில் ஷூட்டிங் !
, வியாழன், 18 ஜூலை 2019 (14:29 IST)
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தமிழ் திரை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவோடு சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

சிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரஜினி படத்தை சிவா இயக்குவது உறுதியாகியுள்ளது.

ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸாக உள்ளது. இந்தப்படத்தை முடித்ததும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் சிவா ஈடுபட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது களவாணி 2 படம் ஹிட்டா ? – சக்ஸஸ் மீட் வைத்துக் கொண்டாடிய படக்குழு !