Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகி சின்மயி & ராகுல் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள்… ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (10:08 IST)
பிரபல பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை வைத்த அவர், தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மி டு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இதன் மூலம் சர்ச்சைகளின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்போது சின்மயி தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.  இது சம்மந்தமான அவரின் ட்வீட்டில் “ திரிபத் & ஷர்வாஸ். இப்போதும் எப்போதும் எங்கள் உலகின் மையமாக இருப்பார்கள்” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் கமெண்டில் சின்மயிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments