Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயம் ரவி படத்தில் சிங்கப்பூர் வில்லன்

ஜெயம் ரவி படத்தில் சிங்கப்பூர் வில்லன்
, வியாழன், 2 மார்ச் 2017 (22:14 IST)
ஜெயம் ரவி நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட  பணிகள் நடைபெற்று வருகிறது.




'மிருதம்' பட இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா நடிக்கவுள்ளார். டி.இமான் இந்த படத்திர்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் என்பவர் வில்லன் வேடத்தில் நடிக்க் ஒப்பந்தமாகியுள்ளதாக  செய்திகள் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசிய படங்களில் நடித்துள்ள இவர் நடிக்கும் முதல் இந்திய படம் இதுதான். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் 'டோரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு