Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் 'டோரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் 'டோரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வியாழன், 2 மார்ச் 2017 (20:43 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள டோரா' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசருக்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைத்ததே இதற்கு சான்று




இந்நிலையில் 'டோரா' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்று அறிவிக்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் சற்று முன்னர் படக்குழுவினர் 'டோரா' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்தது போலவே 'டோரா' திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நயன்தாரா , தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார். மேலும் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உங்களுக்கு தெரியணுமா? இதோ...