லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள போகன் பிப்ரவரி 2 திரைக்கு வருகிறது.
ஆங்கிலப் படங்களை தழுவிதான் போகன் படத்தை எடுத்திருக்கிறேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட்விடுத்திருக்கிறார் லக்ஷ்மண். படம் வெளியானால், லக்ஷ்மண் அடித்தப் படங்கள் என்னென்ன என்று பட்டியலிடும் பணி ரசிகர்களுக்கு இருக்கிறது.
இவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தை பிப்ரவரி 9 வெளியிடுவதாக இருந்தனர். டிசம்பர் 23 -ஆம் தேதியே வெளியாவதாக இருந்த ஹரியின் எஸ் 3 படம் பதுங்கிப் பதுங்கி இப்போது பிப்ரவரி 9 -ஆம் தேதிக்கு வந்துவிட்டதால் போகனின் ரிலீஸை பிப்ரவரி 2 -ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
போகனை பிரபுதேவா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.