Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சிங்கம்’ இந்திப் பட நடிகரின் சகோதரர் காலமானார்…

’சிங்கம்’ இந்திப் பட நடிகரின் சகோதரர் காலமானார்…
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:37 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கிய படம் சிங்கம். இப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் காஜலின் கணவர் அஜய் தேவ் கான் நடித்தார்.

இப்படம் ஹிந்தியில் பெரும் பெற்றி பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜய் தேவ்கானின் சகோதரர் இன்று காலமானார்.

இதுகுறித்து நடிகர்  அஜய் தேவ்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த வருத்தத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் எனது சகோதரனை இழந்துவிட்டேன். எதிர்பார்க்காத நேரத்தில் அவர் எங்கள் விட்டுச் சென்றுவிட்டார். இதனால் எங்கள் குடும்பத்தினரின் இதயம் நொறுங்கியது. அவருடைய அணுக்கத்தை இழக்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இந்த கொரோனா தொற்றுக் காரணமாக நாங்கள் தனியாக பிரார்த்தனை ஏறெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை தமன்னா கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ! ரசிகர்கள் மகிழ்ச்சி