Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கையை கண்டுகொள்ளாத விஜய்சேதுபதி!

லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கையை கண்டுகொள்ளாத விஜய்சேதுபதி!
, செவ்வாய், 25 ஜூன் 2019 (17:20 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் நீண்ட வருடம் கழித்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஹவுஸ் ஓனர். இந்த படம் ஏற்கனவே பத்திரிகையாளர்கள், பிரபலங்களுக்காக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டு பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது
 
சின்ன பட்ஜெட் படமான இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் ஓடினாலே நல்ல லாபத்தை பெற்றுவிடும் என கருதப்பட்டது. அதற்கேற்றவாறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத ஜூன் 28ஆம் தேதியை படக்குழுவினர் தேர்வு செய்து புரமோஷனும் செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் திடீரென விஜய்சேதுபதியின் சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய்சேதுபதியிடமும், 'சிந்துபாத் படக்குழுவினர்களிடம் ரிலீஸ் தேதியை 15 நாட்கள் கழித்து வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்
 
webdunia
ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணனின் கோரிக்கையை கண்டுகொள்ளாத சிந்துபாத் குழுவினர் சற்றுமுன் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி படம் வெளியாவதால் முக்கிய திரையரங்குகள் அந்த படத்திற்கு புக் செய்யப்படும் என்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் பெருங்கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்போது கேள்வி கேட்டீர்கள்... இப்போது ஏன் ஓட்டுப் போட வரவில்லை – நயன்தாராவுக்குக் கேள்வி !