Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னில் பாய்ந்திடும் காதலே... சினம் படத்தின் பாடல் ப்ரோமோ !

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (14:58 IST)
அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.
 
அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். அதில் ஒரு படமாக ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் சினம் திரைப்படம் உள்ளது.
 
இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமாரே தயாரித்துள்ளார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். 
 
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸாக உள்ள நிலையில் அதற்குள் படக்குழு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம்பெறும் "என்னில் பாய்ந்திடும் காதலே" என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments