வில்லனானார் சிம்ரனின் கணவர்
வில்லனானார் சிம்ரனின் கணவர்
கணவரை எப்படியும் நடிகராக்கிவிட வேண்டும் என்று படாதபாடுபட்டார் சிம்ரன். அவர் எதிர்பார்த்தது நாயகன், கிடைத்திருப்பது வில்லன்.
குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் ஓடு ராஜா ஓடு. இப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தை டார்க் காமெடி என்ற புதிய பாணியில் படமாக்கியிருக்கிறார்கள். டோஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஜதின் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் மூலன் என்பவர் தயாரிக்கிறார்.
குரு சோமசுந்தரம் நடித்த ஜோக்கர் வெற்றி பெற்றதால் அவரது பெயரை முன்னிறுத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.