Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்ரனோடு இணையும் சிவகார்த்திகேயன்...

சிம்ரனோடு இணையும் சிவகார்த்திகேயன்...
, வெள்ளி, 16 ஜூன் 2017 (14:02 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.


 

 
சிவாகார்த்திகேயன் தற்போது இயக்குனர் விஜயின் இயக்கத்தில் உருவான வேலைக்காரன் படத்திற்கான டப்பிங் வேலையில் மும்முரமாக இருக்கிறார். அது முடிந்த பின், அவர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். 
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி, நெப்போலியன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். முக்கியமாக இப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி, தனுஷுக்கு ஒரு வாரம் தான் அவகாசம்