"மாநாடு" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!

புதன், 19 பிப்ரவரி 2020 (11:22 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது. 
 

 
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு  துவங்கியுள்ளது. இந்த செய்தியை கேட்ட சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறன்றனர். 
 
அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கேரக்டரில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் டிகர் மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப், YG மகேந்திரன் மற்றும் எஸ்.ஜே  சூர்யா ஆகியோர்  முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் #GetWellSoonTHALA: அஜித்துக்காக பிராத்திக்கும் ரசிகர்கள்!!