Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் ரசிகர்களுக்காக தனியாக வெற்றி விழா நிகழ்ச்சி நடத்தவுள்ள சிம்பு!

Advertiesment
தன் ரசிகர்களுக்காக தனியாக வெற்றி விழா நிகழ்ச்சி நடத்தவுள்ள சிம்பு!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (09:47 IST)
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையடுத்து படக்குழுவினர் வெற்றிவிழா நடத்தினர்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது.

வெளியாகி 3 வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள மாநாடு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 58 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் சேர்த்து சுமார் 97.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஓரிரு நாளில் 100 கோடி க்ளப்பில் இணைய உள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் சிம்புவின் படமாக மாநாடு அமைய உள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா சில தின்ங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. ஆனால் அதில் படத்தின் நாயகனான சிம்பு கலந்துகொள்ளவில்லை. தயாரிப்பாளருக்கும் சிம்புவின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் சிம்பு இதில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் சிம்பு தனியாக தனது ரசிகர்களுக்கு ஜனவரி 6 ஆம் தேதி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

83 படத்தை புறக்கணிக்க வேண்டும்! ட்விட்டரில் ட்ரெண்டிங்! – காரணம் என்ன?