Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

Advertiesment
வெற்றிமாறன்

vinoth

, செவ்வாய், 10 ஜூன் 2025 (07:47 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!