Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு’ வெற்றி குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:32 IST)
சிம்பு நடித்த 'மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த வெற்றியை தேடி தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது
 
 
இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் ’மாநாடு’  
 
எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. 
 
மாநாடு படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை அள்ளி எடுத்து உள்ளது
 
இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட்பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ’மாநாடு’  படக்குழு, என் தாய் தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள்ம் திரையரங்க உரிமையாளர்கள்ம் திரையரங்க நண்பர்கள்ம் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள்ம் என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்
 
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது
 
ஆனால் பதிலுக்கு தெரிவிக்க எனக்கு வேறு வார்த்தைகள் இல்லையே
 
ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்கு நான் மகிழ்கிறேன்
 
வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள்
 
அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் 
 
இவ்வாறு நடிகர் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments