Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரங்களில்‌ முதலாளியே நடிக்கலாம்‌ என துவக்கி வைத்தவர்‌: வசந்தகுமார் மறைவு குறித்து சிம்பு

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (07:46 IST)
விளம்பரங்களில்‌ முதலாளியே நடிக்கலாம்‌ என துவக்கி வைத்தவர்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், தொழிலதிபருமான வசந்தகுமார் மறைவு குறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
உழைக்கும்‌ வர்க்கத்தின்‌ உதாரணம்‌. படிப்படியாக வாழ்க்கையில்‌ முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்‌ கொள்ள வேண்டும்‌ தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்‌ விளம்பரங்களில்‌ பிராண்டின்‌ முதலாளியே நடிக்கலாம்‌ என துவக்கி வைத்தவர்‌.
 
கன்னியாகுமரி மக்களின்‌ முன்னேற்றத்தை கனவு கண்டவர்‌. அதற்காக உழைத்தவர்‌...
 
குடும்பத்தின்‌ மீது செலுத்தும்‌ தீவிர அன்பை வலிமையாக்கிக்‌ கொண்டவர்‌. சூட்ட நிறைய புகழாரங்கள்‌ உண்டு. ஆனால்‌ இவ்வளவு விரைவில்‌ அவரை இழப்போம்‌ என எண்ணியதே இல்லை.
 
ஏற்க முடியாத இழப்பு இது. மீளா துயரத்தில்‌ ஆழ்ந்துள்ள விஜய்‌ வசந்த்‌ மற்றும்‌ வினோத்‌ குமார்‌, இருவரும்‌ தோள்‌ சாய்ந்து கொள்ள தோழனாக நான்‌ நிற்பேன்‌. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு எச்‌.வசந்த குமார்‌ அவர்களை இழந்துவாடும்‌ குடும்பம்‌, வாடிக்கையாளர்கள்‌, ஊழியர்கள்‌, தொகுதி மக்கள்‌ என அனைவருக்கும்‌ எனது ஆறுதலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
 
அவரின்‌ ஆன்மா இறைவன்‌ மடியில்‌ இளைப்பாற வேண்டிக்‌ கொள்கிறேன்‌.
 
இவ்வாறு நடிகர் சிம்பு, மறைந்த எச்.வசந்தகுமார் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments