சிம்புவின் முடி கொட்டாத தாத்தா கெட்டப்
சிம்புவின் முடி கொட்டாத தாத்தா கெட்டப்
ஆதிக் ரவிச்சந்திரனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அறுபது வயது தாத்தா கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார்.
அஸ்வின் என்ற அந்த கதாபாத்திரம் வழக்கமான தாத்தா கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தாத்தா கதாபாத்திரம் என்றால் முடி கொட்டி, பலமிழந்து வயோதிகரைப் போலத்தான் காட்டுவார்கள். இதில் அப்படியில்லாமல் பலமிக்கவராகவும், முடி கொட்டாத இளைஞனை போலவும் காட்டியிருக்கிறார்களாம்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பது முக்கியமானது.