Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்து தல படத்தில் கேஜிஎஃப் ராக்கி கெட்டப்பில் சிம்பு… வைரல் புகைப்படங்கள்!

பத்து தல படத்தில் கேஜிஎஃப் ராக்கி கெட்டப்பில் சிம்பு… வைரல் புகைப்படங்கள்!
, புதன், 19 அக்டோபர் 2022 (14:33 IST)
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த சிம்பு கர்நாடகாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

வெந்து தணிந்தது காடு ரிலீஸை ஒட்டி அதன் ப்ரமோஷனில் அவர் கலந்துகொண்ட நிலையில் இப்போது மீண்டும் சிம்பு ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரக்குமாரி பூங்குழலியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!