Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் மணிரத்னம் இணையும் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன? வெளியான தகவல்!

கமல் மணிரத்னம் இணையும் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன? வெளியான தகவல்!
, புதன், 28 ஜூன் 2023 (11:06 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி முதல் பாகம் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நல்ல வசூலைப் பெற்றது. மணிரத்னம் இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு பேண்டசி கதையை இயக்கும் ஓ மை கடவுளே இயக்குனர்!