Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தில் இணைகிறாரா சிம்பு? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

vinoth
சனி, 9 மார்ச் 2024 (08:00 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் நானி இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிம்பு இணைவதாக வெளியான தகவல் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments