Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் காதலில் விழுந்த சிம்பு…. விரைவில் டும் டும் டும்!

Advertiesment
மீண்டும் காதலில் விழுந்த சிம்பு…. விரைவில் டும் டும் டும்!
, சனி, 8 ஜனவரி 2022 (14:45 IST)
நடிகர் சிம்பு தன்னோடு நடித்த நிதி அகர்வாலோடு காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிதி தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவும் இவரும் இப்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்வரன் படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர்கள் இருவரும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சிம்புவின் சினிமா சம்மந்தப்பட்ட முடிவுகளை கூட நிதி அகர்வால்தான் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

Source வலைபேச்சு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையும் விஷ்ணு விஷால்!