Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேற ஒரு விஷயம் வருகிறது: சிம்பு சூசகம் திருமணம் குறித்தா? (வீடியோ இணைப்பு)

வேற ஒரு விஷயம் வருகிறது: சிம்பு சூசகம் திருமணம் குறித்தா? (வீடியோ இணைப்பு)

Advertiesment
வேற ஒரு விஷயம் வருகிறது: சிம்பு சூசகம் திருமணம் குறித்தா? (வீடியோ இணைப்பு)
, திங்கள், 13 நவம்பர் 2017 (10:20 IST)
சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்த நடிகர் சிம்பு மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பாடலுக்கு ஆதரவு அளித்ததுக்கு நன்றியை தெர்வித்துக்கொண்டு, சூசகமாக எதையோ ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளார்.

 

சக்க போடு போடு ராஜா மற்றும் பண மதிப்பிழப்பு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து நடிகர் சிம்பு உற்சாகமாகியுள்ளார். அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போது எழுந்த சர்ச்சைகளால் சமூக வலைதளத்திலிருந்து வெளியேறிய நடிகர் சிம்பு ரசிகர்களின் தொடர்பில் இருந்து தள்ளியே இருந்தார்.
 
இந்த நிலையில் நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில் சக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாள்களாச்சு; அதனால் பேச வேண்டும் என தோன்றியது.
 
 
எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். சமூக வலைதளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும்போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன் நம்புங்கள் என கூறியுள்ளார்.
 
சிம்பு தனது கெட்டப்பை, படத்தின் கெட்டப் இல்லை, வேறொரு விஷயம் வருகிறது என சூசகமாக கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை சிம்பு தனது திருமணம் குறித்து அறிவிக்க உள்ளாரா என்ற பேச்சும் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரகாஷ்ராஜுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆனந்தராஜ்...