Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு-ஹன்சிகாவின் ‘மஹா’ ரிலீஸ் தேதி இதுதான்!

maha
, செவ்வாய், 28 ஜூன் 2022 (17:51 IST)
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஹா’. இந்த படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை அடுத்த வாரம் முதல் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் 
 
ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் மற்றும் ஒரு சில வீடியோக்களை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஆர்யாவின் சைக்கிள் இத்தனை லட்சமா?