Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது இவர்தான்.. லேட்டஸ்ட் தகவல்!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (14:10 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு துபாயில் இருந்து தற்போது திரும்பியுள்ளதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகை யார் என்பது பற்றி அடிக்கடி தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோன் என பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என ஒரு தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments