Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ரிபெல் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ரிபெல் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

vinoth

, வியாழன், 25 ஜனவரி 2024 (09:31 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கும் ஸ்டண்ட் சில்வா.!