கௌதம் மேனன் படம்னா வேண்டவே வேண்டாம்… சிம்பு பிடிவாதம்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (07:46 IST)
தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிம்புவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு புகார் ஒன்றை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார்.

அதனால் தங்கள் கம்பெனிக்கு ஒரு படத்துக்கான தேதி கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையேற்ற சிம்பு தரப்பு ஒரு படத்துக்கு சம்மதம் தெரிவிக்க, ஐசரி கணேஷ் இயக்குனராக கௌதம் மேனனைப் பரிந்துரைத்தாராம்.(ஏனென்றால் அவருக்கும் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ்). ஆனால் சிம்பு தரப்போ கௌதம் மேனன் இயக்குனர் என்றால் அந்த படம் வேண்டவே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். வெ.த.காடு படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் இடையே சுமூக உறவு முறிந்ததாகவும், அதனால்தான் சிம்பு அவரை வேண்டாம் என சொல்வதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments