Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவின் பிறந்தநாள் டிரீட்டாக வரப்போகும் வீடியோ!

சிம்புவின் பிறந்தநாள் டிரீட்டாக வரப்போகும் வீடியோ!
, சனி, 29 ஜனவரி 2022 (15:13 IST)
சிம்புவின் 39 ஆவது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வர உள்ள நிலையில் ரசிகர்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் ‘பத்து தல’ படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு தவிர்த்த மற்ற காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டன. விரைவில் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் 39 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை ஏறி குண்டாக இருந்த சிம்பு கடந்த ஆண்டு 20 கிலோ வரை எடைக் குறித்து ஒல்லி கில்லியாக வந்தார். இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் அன்று அவர் எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த வீடியோவை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு தெலுங்குப் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!