Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

Advertiesment
மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

vinoth

, புதன், 3 ஜூலை 2024 (10:14 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றினார்.

ஆனால் இப்போதைக்கு அந்த படம் தொடங்கப்படுவது போல தெரியவில்லை. இதனால் சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக தேசிங் பெரியசாமி படத்தைக் கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசி எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவோம் என்றும் கூறிவிட்டாராம். இந்த படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை தக்லைஃப் படத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு இப்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டைனோசர்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் சொன்ன கதை கேட்டு சம்மதம் தெரிவித்த சிம்பு, அவரை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் அனுப்பியுள்ளார். அவர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கும் சிம்பு தனக்கு 50 கோடி ரூபாய் சம்பளம்  வேண்டுமெனக் கேட்டு குட்டையைக் குழப்பி வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளில் சிம்பு கொடுத்த ஒரே ஒரு ஹிட் மாநாடுதான். ஆனால் மற்ற நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதைக் குறிப்பிட்டு தனக்கும் 50 கோடி வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!